News April 2, 2025
1,777 அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்!

படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்ககளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் கோட்டத்தில் இதுவரை 1,777 பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதியுள்ள 891 பஸ்களுக்கு தானியங்களி கதவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.
Similar News
News October 29, 2025
சேலத்தில் இலவச தையல் பயிற்சி!

சேலம் மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 9:30 முதல் மாலை 4:30 மணி வரை என45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சிட்ரா விசைத் தறி பணி மையம் அல்லது 0427 -2219486, 98438 85587 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.SHAREit
News October 29, 2025
நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலத்தில் அக்டோபர் 30 நாளை முகாம் நடைபெறும் இடங்கள் 1)துட்டம்பட்டி வெள்ளையன் மஹால் 2) இடைப்பாடி எஸ்.ஆர்.எம் தனலட்சுமி திருமண மண்டபம் ஆலச்சம்பாளையம் 3)ஏத்தாப்பூர் வாரச்சந்தை 4) நங்கவள்ளி எஸ்.ஆர்.கே திருமண மண்டபம் மாமரத்து மேடு 5)அயோத்தியாபட்டணம் கிராம செயலகம் எம்.தாதனூர் 6)ஆத்தூர் எஸ்ஆர்டி மில் வளாகம் மஞ்சினி
News October 29, 2025
தங்க செயின் ‘டூ’ கவரிங் – வழிப்பறியில் நடந்த ட்விஸ்ட்!

சேலம்: அம்மாபேட்டை, உடையாப்பட்டியை சேர்ந்தவர் கமலா (70). நேற்று முன்தினம் உடையாப்பட்டி அருகே நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள், கமலா அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். போலீசார் விசாரித்ததில், மூதாட்டி அணிந்திருந்தது, ‘கவரிங்’ நகை என தெரிந்தது. ஆனால் மர்ம நபர்கள், தங்கம் என நினைத்து பறித்துச்சென்றதும் தெரிந்தது. இருப்பினும் போலீசார் விசாரிக்கின்றனர்.


