News September 25, 2025

ரயில்வேயில் 1,763 காலி பணியிடங்கள்; APPLY NOW

image

வடக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பணிக்கு 1,763 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 10-வது தேர்வில் Min. 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மத்திய அரசு அங்கீகரித்த தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) அல்லது மாநில தொழிற்பயிற்சி கவுன்சில் (SCVT) வழங்கிய ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்குட்பட்டவர்கள் <>https://examerp.com/<<>> – ல் அக்.17-க்குள் விண்ணப்பியுங்கள்.

Similar News

News September 25, 2025

கொடூரம்.. அண்ணியின் கற்பை சோதித்த நாத்தனார்

image

நாளுக்கு நாள் அறிவியலில் முன்னேறினாலும் சில மூடப் பழக்கங்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை. அப்படி ஒரு கொடூர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. விஜப்பூரில் அண்ணன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாத்தனார், அவரது கற்பை பரிசோதிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட கூறியுள்ளார். அதனை செய்ய மறுத்ததால் பெண்ணை கட்டாயப்படுத்தி எண்ணெய்யில் அழுத்திய ஜமுனா தாகூர், கணவர் மனுபாய் தாகூர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

News September 25, 2025

இனி இப்படி செய்தால் PF பணம் கிடையாது

image

EPF 1952 விதியின் கீழ், திருமணம், படிப்பு, உடல்நல பிரச்னைகள் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவே PF தொகையை எடுக்க வேண்டும் என EPFO அறிவுறுத்தியுள்ளது. இதை தவிர வேறு ஏதும் காரணங்களுக்காக PF பணத்தை எடுத்தால் 3 ஆண்டுகளுக்கு பணம் எடுக்க முடியாது என EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லது அந்த தொகையை அபராதத்துடன் செலுத்தும் வரை மீண்டும் பணம் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

News September 25, 2025

பிஹாரிலும் பாமக போட்டி?

image

பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழ சின்னத்தை அன்புமணி பெற்றதாக ராமதாஸ் தரப்பு கூறி வருகிறது. ஜப்பான், மொரிஷியஸில் கூட அன்புமணி போட்டியிடுவார் என ராமதாஸும் கலகலப்பாக சாடியிருந்தார். இந்நிலையில், இதுவரை கர்நாடகா, ஆந்திரா, டெல்லி தேர்தல்களில் பாமக போட்டியிட்டுள்ளதால், எதிர்வரும் பிஹார் தேர்தலிலும் போட்டியிடுவது குறித்து தலைமை (அன்புமணி) முடிவெடுக்கும் என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!