News October 6, 2025

வங்கியில் 171 காலியிடங்கள்.. ₹64,820 வரை சம்பளம்!

image

இந்தியன் வங்கியில் 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 23- 36 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு ₹64,820- ₹1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

Similar News

News October 6, 2025

BIGGBOSS: வெற்றியாளருக்கு இவ்வளவு பணமா?

image

பிக்பாஸ் 9-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சீசனின் போதும், போட்டியாளர்களுக்கான சம்பளமும், வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வெற்றியாளருக்கு ₹1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளில் ₹60 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News October 6, 2025

விஜய்க்கு கமல் வேண்டுகோள்

image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல் ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு தலா ₹1 லட்சம் நிதியுதவி அளித்தார். இதனையடுத்து பேட்டியளித்த அவர், ஒரு தலைவராக அவர்(விஜய்) செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், எதிரியாக இருந்தாலும் அனுபவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் கமல் குறிப்பிட்டார்.

News October 6, 2025

பாஜக நிர்வாகிக்கு எதிராக அண்ணாமலை புகார்

image

கோவையில் அண்ணாமலையின் பெயரை கூறி விபத்தில் இறந்தவரின் குடும்பத்திடம் இருந்து, பாஜக நிர்வாகி பணம் பறிக்க முயன்றது சர்ச்சையானது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தவறு செய்தது பாஜக நிர்வாகியாக இருந்தாலும் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!