News April 27, 2025
170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
Similar News
News November 17, 2025
பாஜகவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் கவர்னர்: MP

மேற்கு வங்கத்தில் TMC தொண்டர்களை அழிக்க கவர்னர் ஆனந்த போஸ், ஆயுதங்களை பாஜகவினருக்கு வழங்குகிறார் என மே.வங்க MP கல்யாண் பானர்ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்களுக்கு அடைக்கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கல்யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் எச்சரித்துள்ளார்.
News November 17, 2025
BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாள்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது என்றும், முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.


