News March 29, 2025
17 வருட போராட்டம்.. பழிதீர்த்த RCB

CSK அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, தனது 17 வருட கனவை RCB நிறைவேற்றியுள்ளது. கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK அணி, RCB அணியுடன் தோற்றது. அதன் பிறகு நடந்த எந்த போட்டியிலும் RCB அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், 17 வருடம் கழித்து நேற்று நடந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றுள்ளது.
Similar News
News March 31, 2025
இருவேறு விபத்துகளில் 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தனர். மாயதேவன்பட்டி விலக்கில் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் (46), அவரது மகள் சுமித்ரா (18) இருவரும் ஆட்டோவில் செல்லும்போது விபத்தில் சிக்கினர். அதேபோல, அவினாசி அருகே பைக் மீது கார் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதியினர் உயிரிழந்தனர்.
News March 31, 2025
மீண்டும் மோதும் பகத் பாசில் – வடிவேலு… தேதி குறிச்சாச்சு!

மாமன்னன் படத்திற்கு பிறகு பகத் பாசில் – வடிவேலு நடிப்பில் உருவாகிவரும் படம் மாரீசன். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஜூலையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இருக்கும் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. சுதீஷ் சங்கர் இயக்கும் மாரீசன் படத்தில், விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைத்து வருகிறார்.
News March 31, 2025
IPL: கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்…!

புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட காத்திருக்கின்றன. KKR அணி ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், MI அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், MI 23 முறையும் KKR 11 முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?