News March 28, 2025
17ஆண்டு தொடர் தோல்வி.. வரலாற்றை மாற்றுமா RCB?

CSKவின் கோட்டையான சேப்பாக்கத்தில் இன்று RCB களம் காண்கிறது. சேப்பாக்கத்தில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள RCB ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு RCB தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 17 ஆண்டுகளாக தொடரும் சோகத்துக்கு இன்றைய போட்டியில் விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு RCB ரசிகர்களிடையே உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News March 31, 2025
46 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் நாளை முதல் 46 சுங்கச்சாவடிகளில் 2.5%- 2.7% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதில் 8 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை. எஞ்சிய 38 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளவை. புதிய கட்டண உயர்வின்படி, கார்களுக்கான கட்டணம் ரூ.5, பஸ்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15- ரூ.30 வரை அதிகரிக்கிறது. நெமிலி, சின்னசமுத்திரம் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படாது.
News March 31, 2025
காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.13 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை ரூ.14 முதல் ரூ.20 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ.5க்கும், பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 31, 2025
CSKவின் மிக மோசமான ரெக்கார்ட்

2019 முதல், CSK அணி ஒரு முறைகூட 180 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இதுவரை, அணி தனது 9 சேசிங்கில், அனைத்துமே தோல்விதான். இப்படியான ரெக்கார்ட்டை வேறெந்த அணியும் செய்திடவில்லை. ஒட்டுமொத்தமாக, IPL வரலாற்றில், CSK 180 அல்லது அதற்கு அதிகமான ரன்களை 27 முறை மேல் சேசிங் செய்து, அவற்றில் 15ல் வெற்றி பெற்றுள்ளது. இவற்றில், 13 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.