News April 21, 2024
ஆயுதமின்றி இருந்த 17 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை?

சத்தீஸ்கரில் ஆயுதமின்றி இருந்த 17 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 16ஆம் தேதி 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதமின்றி காயம்பட்டு கிடந்த 17 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.
Similar News
News February 4, 2026
பொன்னான நாள்.. இன்று இதை மறந்தும் செய்திடாதீர்கள்

இந்து சாஸ்திரங்களின் படி, புதன்கிழமை அன்று கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது *புதன்கிழமையில் யாரிடமும் கடுமையான சொற்களை பேசக் கூடாது. இதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாகலாம் *புதிய தொழில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும் *புதன்கிழமையில் கருப்பு நிற ஆடைகளை அணிந்தாலும், விநாயகரின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இதனால் வீட்டில் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்குமாம். கவனமா இருங்க!
News February 4, 2026
2026 தேர்தல்.. ரூட்டை மாற்றிய விஜய்

பிப்ரவரி 2-வது வாரத்தில் வேலூர் அகரம்சேரியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், போலீஸ் அனுமதி தராத காரணத்தால் விஜய்யின் பிரசார பயணம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப்.13-ம் தேதி, சேலம் மகுடஞ்சாவடியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி போலீசில் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $190 (இந்திய மதிப்பில் ₹17,180) உயர்ந்து $4,990-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


