News September 21, 2025
தமிழகத்தில் 5 நாள்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார்

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று CM ஸ்டாலின் போலியாக சூளுரைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். TN-ல் கடந்த 5 நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News September 21, 2025
சூர்யகுமார் யாதவ் செய்ததில் தவறில்லை: கங்குலி

ஆசிய கோப்பையில், IND vs PAK போட்டியின்போது, பாக்., வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது சர்ச்சையானது. இந்நிலையில், பாக்., கேப்டனுடனோ (அ) வீரர்களுடனோ கைகுலுக்காமல் செல்வது சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட விருப்பம் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதில் தவறொன்றுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, இந்த விவகாரத்தை ICC-யிடமும் பாக்., கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளது.
News September 21, 2025
பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது: ஸ்டாலின்

பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் பலர் சொல்லலாம், ஆனால் கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி நீடித்தால் தான் தமிழகம் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றார். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ள தங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 21, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி, மின்னலுடன் மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விழுப்புரம், நெல்லை, குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.