News April 9, 2024
ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்

ஒரு குழந்தைக்கு திருமணம் செய்துவைக்கவே பெற்றோர்கள் திண்டாடும் நிலையில், ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜராம் கோதாரா என்ற நபர் தனது பேரன்கள் 12 பேர், பேத்திகள் 5 பேர் என 15 பேரின் திருமணத்தை 2 நாட்களில் முடித்து வைத்துள்ளார். அனைவருக்கும் 2 நாள்களில் திருமணம் நடந்ததால் செலவும் குறைந்துள்ளது.
Similar News
News November 6, 2025
RCB அணி விற்பனை.. வாங்குவதற்கு கடும் போட்டி

2025 ஐபிஎல் சாம்பியன்ஸான RCB அணியை விற்க டியாஜியோ பிஎல்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. RCB ஆடவர், மகளிர் அணிகளை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அவை முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதானி குழுமம், சீரம் இன்ஸ்டிடியூட், JSW குரூப்ஸ் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் RCB அணியின் பெயரும் மாற்றப்படவுள்ளது.
News November 6, 2025
நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, விருதுநகர், செங்கல்பட்டு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே சென்று மழையில் நனையாதீர்கள். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News November 6, 2025
ரஜினிக்கு கமல் எழுதிய லெட்டர்… மடல்… இல்ல கடுதாசி!

சினிமாவில் ரஜினியுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தி, ரஜினிக்கு கமல் X-ல் பதிவிட்டுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அதில், ‘அன்புடை ரஜினி, காற்றால் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


