News December 24, 2024

மீனவர்கள் 17 பேர் கைது

image

தலை மன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்துபோன நிலையிலும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

Similar News

News September 10, 2025

சினிமா நடுவர்களுக்கானது அல்ல: பிருத்விராஜ் ஓபன் டாக்

image

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படாதது விவாதமானது. இதுகுறித்து பேசியுள்ள அப்படத்தின் நாயகன் பிருத்விராஜ், 10 பேர் உட்கார்ந்து ஒரு படத்தை பார்த்து மதிப்பீடு செய்யவோ (அ) ஒரு நடுவர் படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ சினிமா உருவாக்கப்படுவதில்லை, மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என கூறினார். அத்துடன், ஆடுஜீவிதம் படத்துக்கு மக்கள் ஏற்கெனவே மிகப்பெரிய விருதை வழங்கிவிட்டனர் என்றார்.

News September 10, 2025

சற்றுமுன்: புதிய பாதையை தேர்ந்தெடுத்தார் விஜய்

image

திருச்சியில் செப்.13-ம் தேதி புதிய பாதையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். திருச்சியின் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், தற்போது, TVS டோல்கேட்டில் பரப்புரையை தொடங்கி, மரக்கடை MGR சிலை அருகே மக்கள் மத்தியில் விஜய் பேசுகிறார். இதன்பின், காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அரியலூர் செல்கிறார்.

News September 10, 2025

மகளிருக்கான EPS வாக்குறுதிகள்.. திமுக ட்விஸ்ட்

image

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் EPS, அதிமுக ஆட்சி அமைந்தவுடன், திமுக அரசால் நிறுத்தப்பட்ட ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் கொண்டுவரப்படும் என தொடர்ந்து கூறி வருகிறார். புதுமண தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, தீபாவளிக்கு புடவை என்றும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இந்நிலையில், பெண்களுக்கு இலவச தங்கம் வழங்கும் வகையில், TN அரசு <<17666302>>தங்க<<>> நாணயங்களுக்கு டெண்டர் கோரியுள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!