News October 11, 2024
17 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இலங்கை மதிப்பு தல ஒரு நபருக்கு ரூ.50,000 விதம் பணம் செலுத்தினால் மட்டுமே விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MLA முத்துராமலிங்கம் காதர் பாட்ஷா ரூ.2.5 லட்சத்தை மீனவர்கள் சார்பில் செலுத்தினார்.
Similar News
News August 27, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News August 27, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News August 27, 2025
ராம்நாடு: அரசு பரிசுத்தொகை ரெடி! மரம் வளர்க்க ரெடியா?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.