News April 15, 2025
17-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News April 19, 2025
பூமாதேவியின் சினத்தை தணித்த பூமிபாலகர் ஆலயம்

மகாவிஷ்ணு லட்சுமியுடன் தாமிரபரணி நதிக்கரையில் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட நாரதர் பூமாதேவியிடம் கலகம் மூட்ட உடனே பூமாதேவி பாதாள உலகில் மறைய உலகம் நீரின்றி வறண்டது. இதை கண்டு அஞ்சிய தேவர்கள் திருமாலிடம் முறையிட திருமால் பூமாதேவியை சமாதானம் செய்து திருமகளும், நீயும் சமமானவர்களே எனக்கூற பூமாதேவியும் தவறை உணர்ந்தார். பூமிதேவியின் சினத்தை தணித்ததால் பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் திருநாமம் பெற்றார்.
News April 19, 2025
மதுபாட்டில் தகராறில் பெண் அடித்துக் கொலை

தூத்துக்குடி அருகே பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜெபாவைலட்(28). இவருக்கும், குருவுமேடு பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பேரும் ஏப்.16 அன்று மாரிக்கனி வீட்டில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஜெபாவைலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
News April 19, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று உங்கள் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தாலோ அல்லது வாட்ஸ்அப் மூலமாக வரும் இணைப்புகளை கிளிக் செய்து, பாஸ்வேர்டு, பின் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் புகார்களுக்கு அழையுங்கள் (1930)