News November 16, 2024
17ஆம் தேதி மின்சார ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 17ஆம் தேதி மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அந்த நாளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில் சேவைகள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்நேரத்தில், கடற்கரை-பல்லாவரம் இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டு – காஞ்சிபுரம், செங்கல்பட்டு – அரக்கோணம் பகுதி ரயில்கள் இயங்கும்.
Similar News
News March 1, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச். 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
சென்னை: உங்க ஆபீஸில் பிரச்னையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். உங்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
சென்னை: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <


