News September 14, 2024
164 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ராணிப்பேட்டை ஆர்.காந்தி இன்று (14.09.2024) காவேரிப்பாக்கம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 164 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
Similar News
News September 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் 18.9.25 இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News September 18, 2025
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சியில் வி.பி.ஆர்.சி கட்டடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளின் மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி,வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
ராணிப்பேட்டை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…