News May 3, 2024
162 நிறுவனம் மீது நடவடிக்கை

தேசிய விடுமுறை நாளான மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது கோவையில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 78 உணவு நிறுவனங்கள் உள்பட 162 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மே.03) தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது
Similar News
News September 27, 2025
கோவையில் ரேபிஸ் பரவலா? உண்மை என்ன!

கோவை மாவட்டத்தில் 25 தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இது குறித்து கோவை மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி முழுவதுமாகப் போலியானது ஆகும்.நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தனர்.SHAREit
News September 27, 2025
கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 26, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.