News November 14, 2025
162 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA – 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. MGB – 76, ஜன் சுராஜ் – 3, மற்றவை – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 14, 2025
BREAKING: தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையில் இருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. MGB கூட்டணியும் 85 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று டப் பைட் கொடுத்து வந்த நிலையில், தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி NDA 191 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB வெறும் 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

RJD தலைவரும், MGB கூட்டணியின் CM வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 3-வது சுற்று முடிவில் தேஜஸ்வி 10,957 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம், பாஜகவின் சதிஷ்குமார் யாதவ் 12,230 வாக்குகள் பெற்றுள்ளார். 30 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News November 14, 2025
திமுக, விசிக இவர்களை காப்பாற்ற கூடாது: எச்.ராஜா

பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் மத்திய உளவுத்துறை மக்களை காப்பாற்றியுள்ளது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுவரை பணத்தேவை உள்ளவர்கள் மட்டுமே பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர் எனவும் ஆனால், டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் டாக்டர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவும் விசிகவும் இத்தகையோரை காப்பாற்றி, அவர்களுக்காக முட்டு கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறது எனவும் விமர்சித்திருக்கிறார்.


