News August 17, 2024
BSNLஇல் ₹997க்கு 160 நாள் வேலிடிட்டி

AIRTEL, JIO ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்ததில் இருந்து மக்கள், BSNL SIM வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ₹997க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை BSNL வழங்கியுள்ளது. 160 நாள்கள் வேலிடிட்டியுடன் இந்த பிளானில், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 SMS, வரம்பற்ற அழைப்பு வசதி அளிக்கப்படுகிறது. பிற நெட்வொர்க்குகள் இந்த பிளானை 84 நாள்கள் வழங்குகின்றன. நீங்கள் எந்த SIM கார்டு பயன்படுத்துகிறீர்கள்?
Similar News
News November 2, 2025
லெனின் பொன்மொழிகள்

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.
News November 2, 2025
காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News November 2, 2025
நவம்பர் 2: வரலாற்றில் இன்று

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.


