News March 18, 2024
ஒரே நாளில் 16 முறை சூரிய உதயம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள வீரர்கள், ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தையும், சூரியன் மறையும் நிகழ்வையும் எதிர்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி நிலையம், பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதனால் 16 முறை சூரிய உதயத்தையும், சூரியன் மறையும் நிகழ்வையும் வீரர்கள் எதிர்கொள்கின்றனர். எனினும், க்ரீன்விட்ச்(GMT) நேரத்தை கடைபிடிப்பதால் கண்விழிப்பது, தூங்குவதை சீராக தொடர்கின்றனர்.
Similar News
News September 7, 2025
ரஜினியுடன் புதிய படத்தில் நடிக்கிறேன்: கமல் அறிவிப்பு

ரஜினியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த SIIMA விருது விழாவில் பேசிய கமல், நல்ல நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து நடிக்க போகிறோம் எனவும், படத்தை பார்த்துவிட்டு அது தரமான சம்பவமா என்று சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். 2 லெஜெண்டுகள் இணையும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 7, 2025
ஆசிய கோப்பை: சாம்சனை ஓரங்கட்ட முடிவு?

ஆசிய கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டியில், சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் பயிற்சியின் போது, சாம்சனை விட ஜிதேஷ் சர்மாவிடமே கம்பீர் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த தொடரில் கில்லின் வருகைக்கு பின்னர், ஓபனரான சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், கீப்பர் என்ற முறையில் ஜிதேஷ் சர்மாவுடன் அவர் போட்டியில் உள்ளார்.
News September 7, 2025
டிரம்பின் நட்புக்காக தேசத்தின் எதிரியான மோடி: கார்கே சாடல்

PM மோடி டிரம்பின் நண்பராக இருக்கலாம், ஆனால் தேசத்தின் எதிரியாகிவிட்டதாக காங்., தலைவர் கார்கே சாடியுள்ளார். இந்தியாவின் இழப்பில் தான் டிரம்ப் – மோடி நட்பு மேம்பட்டுள்ளதாகவும், GST மறுசீரமைப்பை கொண்டு வர வேண்டும் என காங்., 8 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், பல மாநிலங்களில் தேர்தல் வருவதாலேயே தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.