News October 24, 2024
ATM அட்டையில் 16 எண்கள்.. என்ன அர்த்தம் தெரியுமா?

ATM-ன் முன்பகுதியில் உள்ள 16 எண்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். முதலில் உள்ள 6 எண்கள், அதை அளிக்கும் (விசா, மாஸ்டர் ETC) நிறுவன அடையாள எண் ஆகும். அதையடுத்து 7 முதல் 15 வரையிலான எண்கள், வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்குடன் தொடர்புடைய எண் ஆகும். 16ஆவது எண் CHECK DIGIT எண் ஆகும். அதாவது, அந்த அட்டை செல்லுமா, காலாவதியாகி விட்டதா என்பதை அறிய உதவும். SHARE IT.
Similar News
News November 25, 2025
தவெகவில் இணைவதை மறுக்காத செங்கோட்டையன்

50 ஆண்டு காலம் அதிமுகவிற்காக உழைத்த தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேசமயம், `நீங்கள் தவெகவில் இணைய உள்ளீர்களா?’ என்ற கேள்விக்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. அந்த கேள்விக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், அவர் இணையப் போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 25, 2025
‘அம்மா Sorry.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

சத்தீஸ்கரில் தனியார் பள்ளியில் மாணவி(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்சிபல் பாலியல் தொல்லை கொடுத்ததே, தனது சோக முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரின்சிபலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களே அவசரப்படாதீர், தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
News November 25, 2025
T20 WC: பிப்.15-ல் இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் பிப்.7-ம் தேதி தொடங்குகிறது. குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள IND பிப்.7-ல் USA, பிப்.12-ல் நமீபியா, பிப்.15-ல் பாகிஸ்தான், பிப்.18-ல் நெதர்லாந்துடன் மோதுகிறது. பைனல் மார்ச்.8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. PAK பைனலுக்கு முன்னேறினால் போட்டி கொழும்புவில் நடத்தப்படும்.


