News June 4, 2024

16 ஆவது சுற்றில் 61,302 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 16 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,64,537, அதிமுக – 3,03,235, பாமக – 1,41,083, நாம் தமிழர் – 45,124 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 61,302 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Similar News

News March 6, 2026

விழுப்புரம்: சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்!

image

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 6, 2026

விழுப்புரம்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

விழுப்புரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

News March 6, 2026

பள்ளி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை ஆட்சியர் ஆய்வு

image

திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ்,பள்ளி மாணவிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெற்றது. இதை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (மார்ச்.06) பார்வையிட்டார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சா.செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.

error: Content is protected !!