News April 27, 2025

16 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

image

தூத்துக்குடியில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 14 பயனாளிகளுக்கு ரூபாய் 47கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 27, 2025

பெண்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் பனை ஓலை பொருட்கள்

image

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை கிராமமான மணப்பாட்டில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரங்களில் உள்ள குருத்து ஓலைகளை பயன்படுத்தி பெண்கள் கூடை, பூக்கள் விசிறி, கீ செயின், கிரீடம் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரித்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள இந்த வகை பொருட்கள் இங்குள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது .மேலும் பெண்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

News April 27, 2025

ஆக்கி போட்டிக்கு அணி தேர்வு

image

மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாவட்ட அணிகளில் கலந்து விளையாட பெண்கள் அணி வரும் ஏப்.29 அன்று காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் வைத்து மாவட்ட அணி தேர்வு நடைபெற இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் கீழ்க்கண்ட 9443190781 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

தூத்துக்குடி: முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தூத்துக்குடி மாவட்ட முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️மாவட்ட ஆட்சியர் – 0461-2340601
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400
▶️திட்ட அலுவலர் – 0461-2340575
▶️சார் ஆட்சியர், தூத்துக்குடி – 0461-2320400
▶️வருவாய் கோட்டாட்சியர், திருச்செந்தூர் – 04639-245165
▶️காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
▶️துணை காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
இது போன்ற முக்கிய தொடர்பு எண்களை ஷேர் செய்யவும்

error: Content is protected !!