News March 28, 2024
16 வயது சிறுமிக்கு மிரட்டல் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலிக்க மறுத்தால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை தவறாக பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம், அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குவாகம் காவல் நிலையம் தொடர்பு எண், செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
News September 16, 2025
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க கடன் உதவி!

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு <
News September 16, 2025
அரியலூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

உணவுப்பொருட்களில் குறிப்பாக காய்கறி பயிர்களில் அதிகப்படியான ரசா–யன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தபட்டால் நச்சுத்தன்மை அதிகரித்து மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். SHARE NOW !