News April 27, 2025

16 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

image

தூத்துக்குடியில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 14 பயனாளிகளுக்கு ரூபாய் 47கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 28, 2025

தூத்துக்குடி: ரயில்வேயில் உடனடி வேலை

image

தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 28, 2025

சமூக வலைதள லிங்குகள் காவல்துறையை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆப்களின் லிங்குகளை தேவையில்லாமல் பதிவிறக்கம் செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என எச்சரித்துள்ளது.

News April 28, 2025

காதலிக்கு  நிச்சயமானதால் மாணவர் தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த தனலட்சுமி – அர்ச்சுனன் தம்பதியரின் மகன் சரவணகுமார் (18) என்பவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!