News June 4, 2024

16வது சுற்றிலும் நெல்லையில் திமுக முன்னிலை

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 16வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1,19,004 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
காங். – 3,70,283
பாஜக – 2,51,279
நாதக – 66,658
அதிமுக – 66310
16ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. எனினும் நாம் தமிழர் கட்சியை நெருங்கி வருகிறது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 7,92,035

Similar News

News September 15, 2025

நெல்லை: ஆட்டோ டிரைவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கீழ வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் 6ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனது ஆட்டோவில் பள்ளியில் விடுவதாக அழைத்து சென்று ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்த தகவலின் படி பெற்றோர் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ மற்றும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

News September 15, 2025

நெல்லையில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

image

# இன்று காலை பத்து முப்பது மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

# திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளிலும் இன்று காலை 10 மணி முதல்பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.

# அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் நடக்கிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE….

News September 15, 2025

முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிப்பு

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

error: Content is protected !!