News September 9, 2025

15-வது துணை ஜனாதிபதி, 17-வது தேர்தல்: ஏன் தெரியுமா?

image

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், 2 பேர் தலா 10 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: 1952 – 1962, முகமது ஹமீது அன்சாரி: 2007 – 2017 என பதவி வகித்துள்ளனர். எனவேதான், இது 17-வது தேர்தலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போதைய தேர்தலில் CP ராதாகிருஷ்ணன், பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.

Similar News

News September 9, 2025

பார்பி டாலாக மாறிய திரிஷா .. RECENT CLICKS

image

20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தவறியதே இல்லை. அண்மையில் துபாயில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஊதா நிற ஆடையில் கண்களை கவரும் திரிஷாவின் படங்களை பார்த்து ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். திரிஷா என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

News September 9, 2025

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு

image

தமிழகத்தில் சாதி (அ) வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே தூண்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புகார்கள் உறுதியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் ‘மகிழ் முற்றம்’ எனும் மாணவர் குழு அமைப்பை உருவாக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

News September 9, 2025

நிபந்தனையுடன் விஜய் பரப்புரைக்கு அனுமதி

image

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் திருச்சி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. வரும் 13-ம் தேதி திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும். பரப்புரையின்போது ரோடு ஷோ நடத்தக்கூடாது, அதிக வாகனங்கள் பின் தொடரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

error: Content is protected !!