News September 26, 2025
தமிழக போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 1,588 Graduate Apprentices, Non-Engineering Graduate Apprentices உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 2021- 2025 வரை டிகிரி முடித்தவர்கள் இந்த ஒரு வருட Apprentice பயிற்சியில் சேரலாம். வரும் அக்டோபர் 18-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News September 26, 2025
காவிரியில் 20.22 TMC தண்ணீர் திறக்க வேண்டும்: CWMA

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20.22 TMC தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) உத்தரவிட்டுள்ளது. டெல்லியில், CWMA தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெற்ற 44-வது ஆணைய கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
News September 26, 2025
பாஜகவிற்கு புது பெயர் வைத்து விமர்சித்த ராகுல்

பாஜகவின் இன்னொரு பெயர் ‘பேப்பர் திருட்டு’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து, இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், ஆனால் இதில் எல்லாம் அக்கறை காட்டாத பாஜக, அதிகாரத்தில் நீடிக்கவே அக்கறை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், வேலையின்மை என்பது வாக்கு திருட்டுடன் நேரடியாக சம்பந்தபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
BREAKING: லெஜண்ட் காலமானார்

இந்திய சிகையலங்கார லெஜண்ட் என்று போற்றப்படும் ஹபிப் அகமது (84), வயது மூப்பால் காலமானார். இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் இந்திய தலைவர்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்தவர். அந்த பாரம்பரியத்தை ஹபிப்பும் தொடர்ந்தார். Ex PM இந்திரா காந்தியின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் கருப்பு / வெள்ளை கீற்று ஹேர் ஸ்டைல், Ex ஜனாதிபதி அப்துல் கலாமின் அலையலையான சில்வர் ஹேர்ஸ்டைல் இவர் உருவாக்கியது தான். #RIP