News April 18, 2025
73 பந்தில் 158 ரன்.. மெக்கல்லம் சாதனை படைத்த நாள்

2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. அதில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்தின் ஜாம்பவான் மெக்கல்லம் சரவெடியாக 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி 82 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. மிஸ் யூ மெக்கல்லம் சார்!
Similar News
News December 9, 2025
வாழ்த்து கூறி கூட்டணியை உறுதி செய்த ஸ்டாலின்

சமீபகாலமாக காங்., தலைவர்கள் அடுத்தடுத்து விஜய், SAC-யை சந்தித்ததால், தவெக கூட்டணியில் காங்., இணையலாம் என பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, கூட்டணி வலுவாக இருப்பதை CM ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான கூட்டு முயற்சிகளை சோனியாவின் கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
BREAKING: விஜய் கூட்டத்தில் போலீசார் தடியடி

புதுச்சேரியில் விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் சூழல் உருவானது. ஒரு பாஸுக்கு 2 பேருக்கு அனுமதி என தவெக நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் ஒரு பாஸுக்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் கூறியதால் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
News December 9, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.9) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹96,000-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹199-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனையாகிறது.


