News July 4, 2024

பெண்ணின் பித்தப்பையில் இருந்த 1500 கற்கள்

image

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமை சேர்ந்த ரியா சர்மா என்ற பெண்ணின் பித்தப்பையில் இருந்து 1500 கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதீத வயிற்று வலி காரணமாக மருத்துவரை அணுகிய போது இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முறையான இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்ளாதது பித்தப்பையில் கல் உருவாக காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Similar News

News November 27, 2025

துயரத்தில் தோள் கொடுப்பதே நட்பு❤️

image

மங்களகரமாக நடைபெறவிருந்த திருமணம் திடீரென நின்றதால், <<18381176>>ஸ்மிருதி மந்தனா<<>> பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இத்தகைய இக்கட்டான சூழலில் தனது தோழியுடன் நிற்க வேண்டும் என கருதிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸி.,யில் நடைபெறும் WBBL தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த கோரிக்கையை அவர் விளையாடி வந்த Brisbane Heat அணியும் ஏற்றுக்கொண்டது. தோழிக்காக ஜெமிமா செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News November 27, 2025

சபரிமலையில் 9 பேர் உயிரிழப்பு: அடுத்தடுத்து சோகம்

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 8 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று கோவையைச் சேர்ந்த பக்தர் முரளி(50), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!

News November 27, 2025

சத்தியத்தை காப்பாற்ற சொல்லி பதிவிடவில்லை: DKS

image

கர்நாடகா காங்.,கில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்ற <<18401800>>DKS-ன்<<>> X பதிவு அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை தான் பதிவிடவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே DKS-ஐ CM ஆக்கினால் ஆதரவு தருவேன் என CM ரேஸில் உள்ளவரும், சித்தராமையாவின் தீவிர ஆதரவளருமான, மூத்த அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

error: Content is protected !!