News October 25, 2024
அரசு வங்கியில் 1,500 பணியிடங்கள்: டிகிரி போதும்

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வயதுவரம்பு: 20 முதல் 30 வரை. எஸ்.சி., எஸ்டி. பிரிவினருக்கு 5, ஓபிசி பிரிவினருக்கு 3, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு. விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இன்று (அக்., 24) முதல் நவம்பர் 13 வரை. https://www.unionbankofindia.co.in/-இல் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 12, 2026
டிரம்ப்பை திசை திருப்பும் அமெரிக்க தளபதிகள்!

கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் டிரம்ப், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், டிரம்ப்பின் முடிவு சட்டவிரோதமானது, பைத்தியக்காரத்தனமானது என USA ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, டிரம்ப்பை திசை திருப்பும் வகையில் ஈரானுடன் சண்டையிடலாம், ரஷ்ய கப்பல்களை பிடிக்கலாம் என தளபதிகள் சொல்கிறார்களாம்.
News January 12, 2026
Paid ரிவ்யூக்களுக்கு செக் வைத்த கோர்ட்!

BookMyShow, District போன்ற ஆப்களில் டிக்கெட் புக் செய்யும் போதே படத்திற்கான ரேட்டிங், ரிவ்யூ தெரியும். இவற்றில் பல Paid ரிவ்யூக்கள் என்பதால், அது படங்களை கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில், சிரஞ்சீவியின் ‘மன சங்கரவரபிரசாத் காரு’ படத்திற்கு, இப்படி ரிவ்யூ & ரேட்டிங் போடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய முடிவு என திரைத்துறையினர் பாராட்டுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 12, 2026
திமுகவை அகற்ற பாஜக தலைவர்களுக்கு அட்வைஸ்

உள்ளூர் பிரச்னையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜக தலைவர்களுக்கு தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அட்வைஸ் கொடுத்துள்ளார். சனாதன தர்மம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் எனக் கூறிய அவர், கோவை மண்டலத்தில் பூத் வாரியாக சிறப்பான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது பாஜகவுக்கு வெற்றியை தேடித் தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.


