News February 13, 2025
பெண் நடத்துநர்களாக 150 CM உயரம் போதும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739439471309_1142-normal-WIFI.webp)
பெண் நடத்துநர்களாக 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்று அரசு ஏற்கெனவே தகுதி நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அதனை தற்போது 150 செ.மீ.ஆக குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடத்துநர் பணியிடங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர ஏதுவாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் பெண் வாரிசுகளுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Similar News
News February 13, 2025
வெளியானது தவெக விதிகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737478049843_55-normal-WIFI.webp)
தவெகவின் தலைவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என விதி வகுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவெகவில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல். தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினால் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தலைவர் பதவி விலகினால் பொதுக்குழு கூடி தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2025
வருமான வரி மசோதா: என்ன மாற்றங்கள்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739443945589_1328-normal-WIFI.webp)
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. 622 பக்கங்கள் கொண்ட இதில் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ வார்த்தைகளும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
News February 13, 2025
‘ஆஸ்கர்’ நடிகர் மீது பாலியல் வழக்கு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739446436349_1142-normal-WIFI.webp)
ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸ் மீது இங்கிலாந்து நடிகை ஒருவர் பாலியல் வழக்குத் தொடுத்துள்ளார். அமெரிக்கன் பியூட்டி, யுசுவல் சஸ்பெக்ட்ஸ் படங்களுக்காக 2 முறை ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின். அவர் மீது 2017இல் மீ டு இயக்கத்தில் முதலில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மேலும் பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது லண்டன் கோர்ட்டில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.