News February 28, 2025
150 ஆண்டுகால பழமையான ஆலமரம் அகற்றம்

பெருந்துறை அடுத்த வெள்ளோடு அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதில், 150 ஆண்டுகால பழமையான ஆலமரம் ஒன்று பிடுங்கப்பட்டு, மீண்டும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியில் நடப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த மரத்தின் அடியில் கடை நடத்தி வந்த பெண் அழுதது, அங்கிருந்தவர்கள் மனதை நெகிழ்வடைய செய்தது.
Similar News
News August 17, 2025
ஈரோடு: இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூலப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில் பவானி நகராட்சி தூய்மை பணியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் டெம்போவில் வந்த மோகன் மற்றும் வளர்மதி ஆகிய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 17, 2025
ஈரோடு: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! இன்றே கடைசி

ஈரோடு மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 17, 2025
ஈரோடு மக்களே EB பில் அதிகமா வருதா?

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.