News May 1, 2024
15 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம், கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் இன்று 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கரூர் பரமத்தியில் 44 டிகிரி செல்சியஸ் வெயிலால் மக்கள் அவதியடைந்தனர்.
Similar News
News January 28, 2026
தவெக போடும் பக்கா ப்ளான்!

ஜனநாயகன், CBI வழக்கு விவகாரம் என விஜய் படு பிசியாக இருப்பதால், அரசியல் களத்தில் தவெக சற்று பின்தங்கியுள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையை சரிசெய்ய, தவெக சார்பில் மாநாடு அல்லது பொதுகூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த மேடையில், அரசியல் நிலைப்பாடு, கூட்டணி, வேட்பாளர் பட்டியல், விஜய் போட்டியிடும் தொகுதி ஆகியவை அறிவிக்கப்படலாம் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News January 28, 2026
ஈரானின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் கொமேனி

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி போர் கப்பல் ஈரானை நெருங்கியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஈரானின் உச்சபட்ச தலைவரான கொமேனி, தனக்கு அடுத்த தலைவராக வேண்டியவர் யார் என்பதை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தலைவர் பட்டியலில் அவரின் மகன் மொஜ்தபா உள்பட 3 பெயர்கள் உள்ளதாம். US தாக்குதல் நடத்தலாம் என்பதால் கொமேனி ரகசிய பாதாள அறையில் தலைமறைவாக உள்ளார்.
News January 28, 2026
முத்தக் காட்சியால் நடிகை மீனா கண்ணீர்

‘அவ்வை சண்முகி’ படத்தில் கமலுடன் முத்தக் காட்சியில் நடத்த அனுபவம் குறித்து நடிகை மீனா பேசியது SM-ல் வைரலாகி வருகிறது. அதில், முத்தக் காட்சியில் நடிக்க துளியும் உடன்பாடு இல்லை; என்னால் இதை செய்ய முடியாது என அம்மாவிடம் சொல்லி புலம்பினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோதே ஷாட் ரெடி எனக் குரல் கேட்டதால் பயத்தில் கண்ணீர் வடித்ததாகவும் நடிகை மீனா தெரிவித்துள்ளார்.


