News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 13, 2025
நடிச்சா கண்டிப்பா சொல்றேன்.. சந்தானம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ‘ஜெயிலர் 2′ படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. சந்தானமும் அமைதியாகவே இருக்கிறார். இந்த நிலையில்தான், அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய, படம் தானே, சொல்லிட்டுதான் செய்வேன்’ என பதிலளித்தார்.
News December 13, 2025
ஒரிஜினல் மிளகு Vs பப்பாளி விதை: எப்படி கண்டுபிடிப்பது?

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பொருள் மிளகு. இதில், பப்பாளி விதைகளை சேர்த்து கலப்படம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரிஜினல் மிளகை கண்டுபிடிப்பது எப்படி? *ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகை போட்டால், கலப்படமில்லாத மிளகு தண்ணீரில் மூழ்கிவிடும், பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும் *பப்பாளி விதையில் ஒருவித கசப்பு வாசனை வரும், ஆனால் மிளகுக்கு தனித்துவமான கார வாசனை உண்டு.
News December 13, 2025
GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை: CM

இந்தியாவின் மாநில பொருளாதார வளர்ச்சியில் (GSDP) 16% உடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், பெருமாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் வானுயர் சாதனையை படைத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லாமலேயே இந்த சாதனையை செய்துள்ளதாக கூறிய அவர், 2021-2025 நிதியாண்டுகளில் மட்டும் தமிழகத்தின் பொருளாதாரம் ₹10.5 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.


