News March 29, 2025
என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை நடந்த தேடுதல் வேட்டையில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா – தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 22 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 17,கார்த்திகை 1 ▶கிழமை:திங்கள் ▶நல்ல நேரம்: 6.00 AM – 7.30 AM ▶ராகு காலம்: 7.30 AM – 9.00 AM ▶எமகண்டம்: 10.30 AM – 12.00 AM ▶குளிகை: 1.30 PM – 3.00 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶சிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம், ஸ்ரீ அன்னை நினைவு நாள்.
News November 17, 2025
சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கோல்மால் பாட் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 9 நக்சல்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.
News November 17, 2025
அதிமுகவினருக்கு கொள்கைகள் எதுவும் தெரியாது: உதயநிதி

நாட்டில் சில தலைவர்கள், தங்களது தொண்டர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என விரும்பவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு அதிமுக தொண்டர்களுக்கு கொள்கைகள் எதுவுமே தெரியாது எனவும், திமுகவை எதிர்ப்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கம் என்றும் விமர்சித்துள்ளார். தனது தொண்டர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது என EPS விரும்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.


