News May 28, 2024

கல்குவாரி விபத்தில் 15 பேர் பலி

image

மேகாலயா மாநிலம் அய்ஸ்வால் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு கல்குவாரி மீது விழுந்ததில், கற்கள் சரிந்து விழுந்து 15 பேர் பலியாகினர். மேலும் பலர் குவாரிக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் கற்கள் விழுந்துக் கிடப்பதால் அய்ஸாவாலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடக்கிறது.

Similar News

News March 24, 2026

அமெரிக்காவுடனான ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

image

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். போர் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அவர்கள் விவாதித்தனர். குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர். போரை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றன.

News March 24, 2026

மோடி விரைவில் ரஷ்யாவுக்கு பயணம்

image

PM மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்தியா – ரஷ்யா சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், மோடியை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். மேலும், காலத்தால் அழியாத இரு நாடுகளின் நட்புறவை அவர் பாராட்டினார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 642 ▶குறள்: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. ▶பொருள்: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

error: Content is protected !!