News July 6, 2025
15 வயது சிறுவன் தற்கொலை போலீசார் விசாரணை

வேலூர் நெல்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மேஸ்திரி. இவரது மகன் தனசேகரன்(15) தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லெட் வாங்கித்தர ஆயிரம் ரூபாய் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூலி வரவில்லை வந்ததும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தனசேகரன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (25) கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யூசுப்கான்(23), இவரது அண்ணன் ஆசிப்(25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஞானசேகரனை வழிமறித்து சகோதரர்கள் இருவரும் ஞானசேகரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் நேற்று (ஜூலை 6) வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 6) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
News July 6, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம்,பேரணாம்பட்டு,கே வி.குப்பம்,அணைக்கட்டு மற்றும் திருவலம் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று ( ஜூலை- 06) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.