News July 1, 2024
15 பிடிஓகள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வ.வளர்ச்சி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜோசப்கென்னடி, அரக்கோணம் வ.வளர்ச்சி அலுவலராகவும், நெமிலி வ.வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிர வேலு ஆற்காட்டுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவக்குமார் வாலாஜாவுக்கும், அங்கு பணியாற்றி வந்த சிவராமன் கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளராகவும் என மாவட்ட முழுவதும் 15 பிடிஓகளை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
அண்ணல் அம்பேத்கர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் நபர்களிடம் இருந்து, அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருது பெற விரும்பும் நபர்கள், விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும்.
News September 12, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News September 12, 2025
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 12ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் பயிற்சியை தொடங்கி வைத்தார் இதில் இளம் நுகர்வோர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்