News July 4, 2025
14,582 காலியிடங்கள்… இன்றே கடைசி!

SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கு (CGL) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 14,582 பணியிடங்களுக்கு இந்த தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பித்தபின் திருத்தங்களை ஜூலை 9-11 தேதிகளுக்குள் முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 30 வரை Tier-1 தேர்வும், டிசம்பரில் Tier-2 தேர்வும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News July 5, 2025
’தவறாக புரிந்திருந்தால் அணு ஆயுத போர் வெடித்திருக்கும்’

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாக்., மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது. இந்நிலையில் சமீபத்தில் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா பேசுகையில், பிரம்மோஸ் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்தியிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க 30 – 45 வினாடிகள் மட்டுமே இருந்ததாகவும், ஒருவேளை தவறாக புரிந்திருந்தால் உலகளாவிய அணு ஆயுத போருக்கு வழிவகுத்திருக்கும் என்றார்.
News July 5, 2025
IND vs ENG: 171 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து..

இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் சோபியா (75), டேனி (66) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 171 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி, தீப்தி தலா 3 விக்கெட்டுகளையும், சரணி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.
News July 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 5 – ஆனி – 21 ▶ கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.