News October 13, 2024

14566… இந்த எண்ணில் ஆதி திராவிடர்கள் உதவி கோரலாம்

image

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு உதவ TN அரசு கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்துள்ளது. 18002021989, 14566 ஆகிய 2 எண்களில், ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் வழக்குப்பதிவு செய்தல் மற்றும் புகார் தொடர்பான முறையீடுகள் குறித்து கேட்டு பயன் பெறலாம் என்று TN அரசு கூறியுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிரலாமே.

Similar News

News August 10, 2025

சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

image

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.

News August 10, 2025

தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.

News August 10, 2025

சிம்பு, வெற்றி மாறன் படம் கைவிடப்பட்டதா?

image

சிம்பு – வெற்றி மாறன் இணைந்துள்ள புதிய படத்தின் புரோமோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு படம் நகரவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. இதனிடையே பேட்டி ஒன்றில் படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் உடனடியாக ஆரம்பிக்க போவதாகவும் அப்டேட் கொடுத்து சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!