News May 15, 2024
பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் பராக் (48), அஸ்வின் (28) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PBKS தரப்பில் ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News December 5, 2025
அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள MP கமல்ஹாசன்,
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது தான் என்று கூறியுள்ளார். மேலும், பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘அன்பே சிவம், அறிவே பலம்’ என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
News December 5, 2025
விஜய் கட்சியில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். அண்மைக் காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
2026 தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாதக அறிவித்துள்ளது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீமான் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


