News April 22, 2025

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

image

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, கடந்த 11ம் தேதி கட்டாய திருமணம் நடந்ததாக சைல்ட் ஹெல்ப் லைன்(1098) மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை ஒன்றிய ஊர்நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், கட்டாயத் திருமணம் செய்த ஈஸ்வரன்(24), தந்தை கோவிந்தன், தாய் அம்பிகா ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <>அதிகாரப்பூர்வ X<<>> பக்கத்திலும் புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 30.04.2025 அன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News April 21, 2025

தி.மலையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

image

▶️ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
▶️ இரமணமகரிசி ஆசிரமம் (அருணாச்சல மலையின் அடிவாரம்)
▶️ ஆரணி கோட்டை (ஆரணி பாளையம் )
▶️ சாத்தனூர் அணை
▶️ சவ்வாது மலை (கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்று )
▶️ மாமண்டூர் குகைகள் (வெம்பாக்கம் )
▶️ பீமன் நீர்விழுச்சி (ஜமுனாமுத்தூர்)
▶️பர்வதமலை
ஷேர் பண்ணுங்க மக்களே!
▶️திருமலை ஜெயின் கோயில் (திருமலை)
▶️ ஸ்ரீ பாண்டு ரங்கா பெருமாள் கோயில் (தென்னங்கண்ணூர்)

error: Content is protected !!