News March 28, 2024
14 வருட உழைப்பால் வந்த காவியம் ‘ஆடு ஜீவிதம்’

பிரித்விராஜ் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சுமார் 14 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரண வேதனையை கொண்டே நகர்கிறது. பிரித்வியின் நடிப்பு ஒரு தூண் என்றால், இன்னொரு தூணாக நிற்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. சாமானியனின் வலியை மிக அழுத்தமாக காட்டியிருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நீங்க படம் பாத்துட்டீங்களா?
Similar News
News November 6, 2025
இந்த நாடுகளுக்கு விசா தேவையில்லை.. பறப்போமா?

நினைத்த நேரத்தில் பையை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டுமா? பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா தேவையில்லை. இது உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளுக்கு, இந்தியர்கள் விசா இல்லாமல் எளிதாக பயணிக்கலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த நாட்டுக்கு பறக்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க.
News November 6, 2025
BREAKING: விடுமுறை… நாளை முதல் முக்கிய அறிவிப்பு

வார விடுமுறையில் மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சுமார் 1,000 சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(நவ.7) முதல் 9-ம் தேதி வரை சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். SHARE IT.
News November 6, 2025
ஓட்டுப் போட மிகவும் ஆர்வம் காட்டும் பிஹார் மக்கள்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிஹார் தேர்தலில், மதியம் ஒரு மணி வரை, 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கத்தை விட இம்முறை பிஹார் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை வாக்குப்பதிவு சதவீதம் தெளிவாக காட்டுகிறது. அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 46.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. பிஹாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


