News February 27, 2025
ஒழுங்கீனமாக செயல்பட்டால் 14 வகை தண்டனை

பொதுத்தேர்வில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 14 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பிட் வைத்திருந்தாலோ (அ) விடைத்தாள் பறிமாற்றத்தில் ஈடுபட்டாலோ, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்கள் திறமையை நம்பி நன்றாக தேர்வை எழுதுங்கள்..
Similar News
News February 27, 2025
புளி விலை மளமளவென சரிவு

வரத்து அதிகரிப்பால் புளி விலை கணிசமாக குறைந்துள்ளது. மொத்த சந்தையில் தோல் நீக்காத 36 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை புளி ₹3,500லிருந்து ₹2,700ஆக குறைந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் ஒரு கிலோ ₹140 – ₹170 வரை விற்கப்படும் புளி ₹100ஆக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதேநேரம், புளி விலை சரிவு விவசாயிகளை அதிகம் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். உங்கள் ஊரில் ஒரு கிலோ புளி விலை என்ன?
News February 27, 2025
பாக். எங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை: இந்தியா

மனித உரிமைகள் விவகாரத்தில் பாக். தங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பாக். குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த இந்தியா, பாக். ராணுவ தீவிரவாதிகள் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்புவது வேதனை அளிப்பதாகவும், அந்நாட்டில் தான் மனித உரிமைகள் மீறல் அதிகம் நடப்பதாகவும் சாடியுள்ளது.
News February 27, 2025
தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் (TNMRB) Assistant Surgeon பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை Dental Surgery படித்த 37 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 47 காலிப் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <