News April 26, 2025
14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Similar News
News December 1, 2025
அரியலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை அளவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை அரியலூரில் 3.2 மி.மீ, திருமானூரில் 2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 5 மி.மீ, செந்துறையில் 3 மி.மீ, ஆண்டிமடத்தில் 3.4 மி.மீ, தா.பழுரில் 3 மி.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 24.6 மில்லிமீட்டர் மழை பதிவு.
News December 1, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹13,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹196-க்கும், கிலோவுக்கு ₹4,000 உயர்ந்து ₹1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவ.29-ம் தேதி (சனிக்கிழமை) வெள்ளி விலை ₹9000, டிசம்பர் மாதத்தில் முதல் நாளான இன்று ₹4000 என 2 நாள்களில் மொத்தம் ₹13,000 அதிகரித்துள்ளது.
News December 1, 2025
நெல்கொள்முதல் விவகாரம்: திமுக நோட்டீஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


