News January 1, 2026
14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என்கவுன்டர்

பிஹார், பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், முக்கிய நக்சலைட் தலைவர் தயானந்த் மலாக்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். 14-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரின் தலைக்கு ₹50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மலாக்கரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், INSAS ரகத் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News January 7, 2026
கபில் தேவ் பொன்மொழிகள்

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள். * நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. *உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
News January 7, 2026
மோடி என் மீது அதிருப்தியில் உள்ளார்: டிரம்ப்

தனக்கு மோடியுடன் நல்ல உறவு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியாவுக்கு அதிக வரிகளை விதித்ததால் மோடி தன் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரியை விதித்தது குறிப்பிடதக்கது.
News January 7, 2026
டயாபடீஸை கட்டுப்படுத்த வாக்கிங் எப்படி உதவுகிறது?

தினமும் மேற்கொள்ளும் 30 நிமிட வாக்கிங் டயாபடீஸை கட்டுப்படுத்த பலவழிகளில் உதவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *வாக்கிங் செல்லும்போது செயல்படும் அசைவுகள் தசை சுருக்கங்கள், இரத்த ஓட்டத்தை தூண்டும். *உணவுக்குப் பிறகு விறுவிறுப்பான நடைபயிற்சி செல்வது இரத்த சர்க்கரை குறைக்க உதவும். *சர்க்கரை நோய் உள்ளவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். * நடைபயிற்சியால் சர்க்கரை நோயாளிகள் இரவு நன்றாக தூங்கலாமாம்.


