News April 22, 2025
14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, கடந்த 11ம் தேதி கட்டாய திருமணம் நடந்ததாக சைல்ட் ஹெல்ப் லைன்(1098) மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை ஒன்றிய ஊர்நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், கட்டாயத் திருமணம் செய்த ஈஸ்வரன்(24), தந்தை கோவிந்தன், தாய் அம்பிகா ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
தி.மலை: உங்களிடம் பைக், கார் இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <
News December 4, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


