News September 13, 2024
14ம் தேதி முதல்வருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு: அமைச்சர் அன்பரசன் வேண்டுகோள்

அமெரிக்காவில் 16 முன்னணி தொழில் நிறுவனங்களிடமிருந்து தமிழகத்திற்கு ரூ.7016 கோடி முதலீடுகளை ஈர்த்த தமிழக முதல்வர் 14-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து திமுகவினரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 9, 2025
காஞ்சி: உங்க நிலத்தை காணமா??

காஞ்சிபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
காஞ்சி: ரமணா பட பாணியில் நிகழ்ந்த சோகம்…

காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்கிய 2 வயது குழந்தை, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் சுய நினைவை இழந்து இறந்ததாக பொற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
News December 8, 2025
காஞ்சி: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி, வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காட்ராம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் வளையகரணை ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


