News January 13, 2025
சுயேச்சை வேட்பாளர்களுக்கு 135 சின்னங்கள் தயார்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப். 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் நிலையில், சுயேச்சைகளுக்கு 135 சின்னங்களை EC ஒதுக்கியுள்ளது. அதில், ஏதேனும் 3 சின்னங்களை தேர்வு செய்து அளிக்க வேண்டும், அவற்றில் ஒரு சின்னம் ஒதுக்கப்படும். ஒன்றிற்கும் மேற்பட்டாேர் ஒரே சின்னத்தை கோரியிருந்தால் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என EC கூறியுள்ளது.
Similar News
News December 8, 2025
நட்புன்னா என்னான்னு தெரியுமா?

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?
News December 8, 2025
விஜயகாந்தை விட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: TTV

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது ஆளும் கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் வருகையால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தது, அதைவிட பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் எனவும் கணித்துள்ளார். இப்படி சொல்வதால் தவெகவுடன், அமமுக கூட்டணி அமைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
News December 8, 2025
பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

‘பிறந்தநாள் வாழ்த்துகள், என் இதயமே’ என மறைந்த கணவர் தர்மேந்திராவை ஹேமமாலினி உருக்கமாக வாழ்த்தியுள்ளார். நீ என்னைவிட்டு சென்று 2 வாரங்களை கடந்த நிலையில், நொறுங்கி போன மனதை மெதுவாக ஒட்டவைத்து வருகிறேன். என்னுடன் எப்போதும் நீ இருப்பாய் என தெரியும். நம் சந்தோஷமான நினைவுகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நம் அழகான நினைவுகளுக்காவும், இரு அழகிய மகள்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என உருகியுள்ளார்.


