News April 12, 2025
135 தலைமைக் காவலர்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி காவல் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, புதுச்சேரி காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 135 தலைமைக் காவலர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 13, 2025
புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். நாளை முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
News April 12, 2025
வேண்டியதை நிறைவேற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி, எம்ஜி சாலை பகுதியில் அமைந்துள்ளது கன்னிகா பரமேஸ்வரி. இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். நவராத்திரி, பொங்கள், தீபாவளி போன்ற நாட்கள் இங்கு சிறப்பான நாட்களாகும். இங்கு வந்து வேண்டினால் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 12, 2025
61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்-அரசு அறிவிப்பு

புதுவை மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மீன்வளங்களை பாதுகாக்கும் வகையில் வரும் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிப்பு தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. மேலும், அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்ட விசை படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதை உங்க மீனவ நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…