News October 22, 2024
24 மணி நேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்கள் பலி?

24 மணி நேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை 6.78 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்து விட்டதாகவும் இதுமட்டுமன்றி, ரஷ்யாவுக்கு சொந்தமான 9,047 டாங்கிகள், 18,111 கவச வாகனங்கள், 19,565 பீரங்கிகள், 369 போர் விமானங்கள், 329 ஹெலிகாப்டர்களை அழித்து விட்டதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவலை ரஷ்யா உறுதி செய்யவில்லை.
Similar News
News August 22, 2025
தோனி கேப்டன்சி.. ஒரே வரியில் சொன்ன டிராவிட்

தோனி கேப்டன்சியில், அவர் வீரர்களைக் கையாண்ட விதத்தை இப்போதும் நினைத்து பிரமிப்படைவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரு இளைஞராக இருந்து கேப்டன் பொறுப்பில் தன்னை தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றும் தோனிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல், வீரர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் திறனே ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்.
News August 22, 2025
உக்ரைன் போரை இந்தியா நிரந்தரமாக்குகிறது: USA

50% வரி விதித்தபோதிலும் ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தக உறவை இந்தியா தொடர்கிறது. இதனால், இந்தியா உக்ரைன் மீதான போரை நிரந்தரமாக்குவதாக வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ காட்டமாக தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய்யை வாங்கி, உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை தொடுப்பதற்கான நிதியை இந்தியா வழங்குவதாகவும் அவர் சாடியுள்ளார். இந்தியா, ஒரு லாப நோக்கத்துடனான சலவை இயந்திரமாக செயல்படுகிறது என்றார்.
News August 22, 2025
BREAKING: தெருநாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

டெல்லியில் தெருநாய்களை தனியாக காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தெருநாய்களை பிடித்து தனியாக காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்திய பிறகு மீண்டும் நாய்களை வெளியில் விட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.